கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு; ரூ.2.46 லட்சம் பறிமுதல், 4 பேர் மீது வழக்கு.
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். முதற்கட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2,46,600 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையைத் தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், இடைத்தரகர்கள் அண்ணாமலை (எ) ஷெரிஃப், பழனி, ஓட்டுனர் பள்ளியைச் சேர்ந்த சென்றாயன் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments