Breaking News

விசிக சார்பில் கரூரில் மது ஒழிப்பு மற்றும் மகளிரின் மாநாடு விழிப்புணர்வு பேரணி.


கரூர் மாவட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு கரூரில் மது ஒழிப்பு மற்றும் மகளிரின் மாநாடு விழிப்புணர்வு பேரணி விடுதலை இயக்கம் மாவட்டச் செயலாளர் அன்னபூரணி தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி காதர் பல மாணிக்கம் கரூர் மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோ மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு மற்றும் குளித்தலை கிருஷ்ணராயபுரம் அரவக்குறிச்சி கரூர் ஆகிய தொகுதியில் இருந்து பெண்கள் பலர் கலந்து கொண்டனர் இப்விழிப்புணர்வு பேரணி கரூர் பஸ் ஸ்டாண்ட்தொடங்கி முக்கிய பிரதான சாலைகள் வழியாக லைட் ஹவுஸ் கார்னரில் முடிவடைந்தது. பேரணியில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!