பூம்புகாரில் இருந்து துவங்கிய மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் வேளாண் மண்டல பாதுகாப்பு மண்ணின் மக்களின் நடைபயணம் தடுத்து நிறுத்தும்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் இருந்து தஞ்சை நோக்கி மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதி செய்வோம் என்பதை வலியுறுத்தி பிரச்சார விழிப்புணர்வு நடைபயணம் இன்று துவங்கியது. மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் பூம்புகார் கண்ணகி சிலையில் இருந்து துவங்கிய மண்ணில் மக்களின் நடைபயனம் 29 ஆம் தேதி தஞ்சையில் முடிவடைகிறது.
இந்நிலையில் துவங்கிய நடைபயணத்தை பூம்புகார் கடைவீதியில் போலிசார் தடுத்து நிறுத்தினர். பல்வேறு கிராமங்கள் வழியே நடை பயணமாக சென்று மாலை சீர்காழியில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.இந்நிலையில் நடை பயணமாக செல்லக்கூடாது எனவும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்க கூடாது எனவும் கூறி பூம்புகார் போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனை தொடர்ந்து மாவட்டத்தில் மூன்று இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக உறுதி அளித்ததால் அதனை ஏற்று அனைவரும் நடைபயணத்தை கைவிட்டு வாகனத்தில் தங்கள் பயணத்தை துவங்கினர்.
No comments