Breaking News

பொன்னேரி அருகே காணியம்பாக்கம் கிராமத்தில் அலமாதி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் காணியம்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் கால்நடை வளர்ப்பின் மூலம் தமிழக பட்டியலின  விவசாயிகளின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் நிதி உதவி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் புதுடில்லி காணியம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின விவசாயிகள் வைத்திருக்கும் கறவை மாடுகளுக்கு மற்றும் ஆடுகளுக்கும் உணவு தீவனங்கள்  மருந்து மாத்திரைகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு அலமாதி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ந. குமரவேலு, தலைமை தாங்கினார்.

மீஞ்சூர் தெற்கு திமுக ஒன்றிய கழக செயலாளர் காணியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கா.சு ஜெகதீசன், முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக  பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு  ஆடு மாடுகளுக்கான தீவனங்கள், நுன் சத்து திரவ மருந்து, நுன் சத்து கலவை, தாது உப்பு கட்டி, பயிற்சி கையேடு ஆகியவற்றை வழங்கினார். 

ஆடு மாடுகளை எவ்வாறு அறிவியல் ரீதியாக வளர்க்க வேண்டும் என்ற செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் கீதா மருத்துவர் பேராசிரியர் மீஞ்சூர் புங்கம்பேடு உ‌.வே.சுதர்னாசாரியார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி மணவாளன், மெரட்டூர் நேதாஜி, உள்ளிட்டூர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!