Breaking News

ஈரோட்டில் முதல் முறையாக மாநில அளவிலான ஏர்கன் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றது.


ஈரோட்டில் முதல் முறையாக மாநில அளவிலான ஏர்கன் துப்பாக்கி சுடும் போட்டிகள் பெருந்துறையில் உள்ள ஈரோடு சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமையினை  வெளிப்படுத்தினர். 


10 மீட்டர் ஏர்கன் துப்பாக்கி சுடும் போட்டியின் வகை பிரிவுகள் (Air Rifle) ரைப்பில்  (Air Pistol) பிஸ்டல். இரண்டு பிரிவுகளில்  தனிப்பட்ட பிரிவுகள் மற்றும்  கூட்டு பிரிவுகள் மற்றும்  கலப்பு பிரிவுகள் எனும் மூன்று வகைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வீரர் வீராங்கனைகள் வயது  10, 12, 14, 17, 19, 21, மற்றும் 30 வயதிற்கு மேல் பிரிவுகளில் அனைவரும் கலந்து கொண்டனர். இப்போட்டியினை  ஈரோடு சட்டக்கல்லூரி மற்றும்  ஈரோடு மாவட்ட ஏர் ரைபிள் சூட்டிங் சங்கமும் மற்றும் விஜயம் துப்பாக்கி சுடும் பயிற்சி அகாடமி  இணைந்து நடத்தினார்கள். இப்போட்டியினை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் துவக்கி வைத்தார்,  


ஈரோடு சட்டக் கல்லூரி  தலைவரும். திமுக மாநில நெசவாளர் அணி செயலாளருமான  சிந்துரவிச்சந்திரன் தலைமை மற்றும் இணை செயலாளர்  அருண் பாலாஜி  முன்னிலை  சித்தார்த்தன் நடுவர் நீதிபதி சென்னை  உயர் நீதிமன்றம், திருமலை அரசு தரப்பு வழக்கறிஞர் பெருந்துறை, துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஈரோடு மாவட்டம்   அச்சீவர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமி ஸ்போர்ட்ஸ் மற்றும் விஜயம் ஏர்கன் துப்பாக்கி சுடும் பயிற்சி அகாடமி மாணவ மாணவிகள் அனைத்து பிரிவுகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி  ஈரோட்டிற்கு பெருமை சேர்த்தனர் இதில் வெற்றி பெற்ற அனைத்து துப்பாக்கி சுடும் வீரர் வீராங்கனைகளுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் அருண் பாலாஜி இருவரும் இணைந்து வழங்கி ஊக்குவித்து கௌரவித்தனர். 


மேலும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த ஈரோடு சட்டக் கல்லூரி முதல்வர் கஜேந்திர ராஜ், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சங்கர சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குனர் தனலட்சுமி,இணை பேராசிரியர் ஐயப்பன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி காங்கயம் இணை பேராசிரியர் குமாரசாமி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி,   ஈரோடு மொபைல் பார்க் பரணி. ஈரோடு ஏர்கன் ரைபிள் சூட்டிங் சங்கம் பொறுப்பாளர்கள் சீனிவாசன், மோகன்ராஜ், தமிழ்செல்வன். இளங்கோவன், மனோஜ். தமிழரசன் ஏர்கன் துப்பாக்கி சுடும் போட்டியினை ஈரோடு மாவட்ட ஏர்கன் ரைபிள் சூட்டிங்  தலைவரும் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) உடற்கல்வி இயக்குனரும் தேவகாந்தன் மற்றும் பொதுச் செயலாளர்  தி.மணிகண்டன்  இருவரும் இணைந்து சிறப்பாக துப்பாக்கி சுடும் போட்டியினை நடத்தினர். 


மேலும்  போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் வாழ்த்துக்களையும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும்  நன்றியினை தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!