Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள ஓர் முக்கிய அறிவிப்பு.


வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் அவர்களின் உத்தரவின்படியும் மற்றும் வேளாண்மை இயக்குநர், சென்னை அவர்களின் ஆலோசணையின்படியும் திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.


விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுட்ட உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏ.டி.எம். கார்டு, கூகுள்பே, போன்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் மூலம் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மைங்களில் அதற்கான பண மில்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் பி.ஓ.எஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.


எனவே, இடுபொருட்களை வாங்க வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வரும் விவசாயிகள் முழுதொகை அல்லது பங்களிப்புத்தொகையினை தங்களது ஏ.டி.எம். கார்டு, கூகுள்பே, போன்பே மூலமாக பணம் செலுத்தி இடுபொருட்கனை பெற்று பயனடையலாம் என்று திருவள்ளுர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், திரு.கா.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!