மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம்; மாவட்ட ஆட்சியர், எம் பி., மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு தொடக்கி வைத்து பார்வையிட்டனர்.
மயிலாடுதுறையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் டிராக்டர், உழவு இயந்திரம், நெல் நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், வரப்பு கட்டும் இயந்திரம், நானோ உரம் தெளிக்கும் இயந்திரம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடக்கி வைத்து பார்வையிட்டனர்.
இதில், ட்ரோன் மூலம் நானோ உரம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. முகாமின், முடிவில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் தனியார் வேளாண் இயந்திர விற்பனை பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments