புவனகிரி அருகே தலைக்குளம் கிராமத்தில் ஸ்ரீ அக்னி வீரன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தலைக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அக்னி வீரன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசம் நான்கு கால யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று பின் கடங்கள் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி வலம் வந்து பின்னர் புனித நீர் கலசம் கோவில் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ பொன்னியம்மன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோவில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments