ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்; வீடியோ வைரல்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், பல்வேறு கிராமங்களில் இருந்தும் மாணவ மாணவிகள் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேருந்தில் வந்து பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளி முடிவுற்று மாணவ மாணவிகள் வீடு திரும்பிய போது, ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் காவல்துறையினர் முன்பே சினிமாவில் வரும் காட்சியைப் போல அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது, முன்னதாக ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை, உரிய முறையில்சீருடைகள் அணிவதில்லை, அதே போன்று பள்ளிக்கு வந்தாலும் பேருந்து நிலையம் ஆரணி ஆற்றங்கரையோரம் சுற்றித் திரியும் நிலைமை இருந்து வந்த நிலையில், அவ்வப்போது பல்வேறு சர்ச்சைக்குரிய வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், ஆசிரியர்களும் இதனை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது, இந்நிலையில் நேற்று மாலை ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் காவல்துறையினர் முன்பு ஆக்ரோஷமாக ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில், மாணவ மாணவிகள் பெற்ற பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
குறிப்பாக சம்பவ இடத்தில் காவலர் உள்ள நிலையில் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது, அரசு பள்ளி மாணவர்களின் நிலை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது!, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.!
No comments