Breaking News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா சுவாமி தரிசனம் செய்தார்.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகை ராதா. அதைத்தொடர்ந்து அவர் கேம், அடவாடி, காத்தவராயன் போன்ற தமிழ் படங்களில் நடித்தார். இந்த நிலையில் நடிகை ராதா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர். 

அவரை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் கைகொடுத்து மகிழ்ந்தனர். புதிய படம் ஒன்று நடித்து வருவதாகவும், அந்த படம் வெற்றி பெறவேண்டி இன்று சுவாமி தரிசனம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.


திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் 

No comments

Copying is disabled on this page!