தேர்தல் ஒப்பந்தப்படி மூன்று வாரிய தலைவர் பதவிகளை பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என பாமக வலியுறுத்தி உள்ளது
புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கவுண்டம்பாளையம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். மாநிலத் துணை அமைப்பாளர் வடிவேல் மதியழகன், சங்கர், வன்னியர் சங்க தலைவர் துரை, மாநில ஆலோசகர் ஜெயபாலன், செயலாளர் நாகப்பன், பொருளாளர் நரசிம்மன், சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர் சம்பந்தம், சிவப்பிரகாசம் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுடன் என். ஆர்., காங்., பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. தேர்தல் ஒப்பந்தப்படி முதல்வர் மற்றும் பா.ஜ.க பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கொடுத்த உறுதி மொழிப்படி மூன்று வாரிய தலைவர் பதவிகளை வழங்க வேண்டும்,வரும் 2026 சட்டசபை தேர்தலில், புதுச்சேரி, காரைக்கால் உட்பட 15 தொகுதிகளை தேர்ந்தெடுத்து தீவிர களப்பணி செய்து 10 தொகுதிகளில் போட்டியிடுவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments