திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினந்தோறும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனம் மூலமாக வேலைக்கு செல்லும் வினோத் குமார் அவர் வழக்கம்போல் இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது தண்ணீர் குளம் அடுத்த தண்டலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தண்ணீர் குளம் பகுதியில் சவுடு மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் வினோத்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து லாரியின் முன் பக்க கண்ணாடியை கல்லைக் கொண்டு வீசி உடைத்தனர்.
வேலைக்குச் சென்ற இளைஞர் லாரி மோதி உயிரிழந்ததை தகவல் கேள்விப்பட்ட அவருடைய உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவர் உடலைக் கண்டு கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக செவ்வாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரியில் இருந்து வெளிவரும் லாரிகளால் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்கதையாக இருந்து வருவதால் மணல் லாரிகள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments