Breaking News

மீஞ்சூரில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் கன்டைனர் லாரி மேலே ஏறி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டு வசதி வாரியம் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான ஹரிஹரன் (30). இவர் இருசக்கர வாகனத்தில் மீஞ்சூர் பஜாரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் பின்னால் வந்த கண்டைனர் லாரி ஹரிஹரன் மீது ஏறியதில் உடல் நசுங்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஹரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கன்டைனர் லாரி ஓட்டுநர் நவீன்குமாரிடம் (32) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!