Breaking News

யானைக்கு வெள்ளி கொலுசு அணிவித்து கஜ பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்த பக்தர்கள்.


மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு, விஸ்வநாதபுரம் பகுதி பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு யானையை வரவழைப்பு  வெள்ளி கொலுசு அணிவித்து கஜ பூஜை செய்து  சிறப்பு வழிபாடு.


விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில்  விஸ்வநாதபுரம் பகுதியில் பொதுமக்கள் மயூரநாதர் கோயில் யானையை வரவழைத்து அதற்கு சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை செய்தனர்.  


யானை அபயாம்பிகையை  சிவவாத்தியங்களுடன்   அழைத்து வந்தனர். யானைக்கு வெள்ளி கொலுசு அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை, வழங்கியும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். 


இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது, யானை புனித நீரை துதிக்கையால் முகர்ந்து தீர்த்தமாக தெளித்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் யானைக்கு மலர்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகள் தோறும் யானையை வரவேற்று ஆராத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.

No comments

Copying is disabled on this page!