Breaking News

புதுச்சேரி காந்தி திடலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடி அருணிமா கலைக் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.


பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினை, வணிக முன்னெடுப்பை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி காந்தி திடலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடி அருணிமா கலைக் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.


மத்திய அரசின்‌ பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மலைவாழ்மக்கள் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை மேம்பாட்டு இணையம் ஆகியவை சார்பில் பாரம்பரிய பழங்குடியினரின் தொழில்முனைவு, கைவினை, கலாச்சாரம், உணவு மற்றும் வணிக முன்னெடுப்பை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரியில் ஆடி அருணிமா  கண்காட்சி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் வரும் 15ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியினை  முதலமைச்சர்  ரங்கசாமி நேற்று மாலை  திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்  லட்சுமி நாராயணன் மற்றும் மலைவாழ் மக்கள் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை மேம்பாட்டு இணைய நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் மலைவாழ் மக்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறித் துணி வகைகள், அணிகலன்கள், மரச்சாமான்கள், சுடுமண் கலைப் பொருட்கள், மண்பாண்டங்கள், கண் கவர் ஓவியங்கள், திரைச் சீலைகள் 30 அரங்குகளில்  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!