Breaking News

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தேனி மாவட்ட குழு கூட்டம்.


அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தேனி மாவட்ட குழு கூட்டம் தேனியில் உள்ள கே டி கே தங்கமணி இல்லத்தில் கடமலை - மயிலை ஒன்றிய செயலாளர் ஆ.கார் மார்க்ஸ் அவர்கள்தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் வே.பரமேஸ்வரன் அவர்களும் AITUC மாவட்டச் செயலாளர். K. ஞானவேல்அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்   இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரா தமிழ் பெருமாள் அவர்கள்மாவட்ட மாநாடு மாநில மாநாடு 2024 உறுப்பினர் பதிவு குறித்து விரிவாக உரையாற்றினார்.

வருகின்ற அக்டோபர் 6.தேதி AIYF தேனி மாவட்ட 9வது மாவட்ட மாநாடுஆண்டிபட்டியில் நடத்துவதென ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது இந்த மாநாட்டிற்கு தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜனநாயக இளைஞர்களையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.தர்மபுரியில் 2026 ஜனவரி மாதம் 25 26 27 தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு ஆயிரம் இளைஞர்களை ஒன்று திரட்டி பேரணியில் பங்கேற்க செய்ய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது

No comments

Copying is disabled on this page!