அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி திமுகவில் இணைந்தார் திமுக சார்பில் வரவேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் திமுக மாவட்ட செயலாளர் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் முன்னிலையில் செம்பனார்கோவில் ஒன்றியம் கூடலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியுமான கல்யாணசுந்தரம் மற்றும் நெடுவாசல் ஊராட்சி அதிமுக கிளை செயலாளர் வேதமுத்து ஆகியோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர் அவர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர் நிகழ்ச்சியில் திமுக செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர் திமுக மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments