மேலூர் கிராமத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய மேலூர் கிராமத்தில் வருகின்ற 24 ஆம் தேதி அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அதிமுக சார்பில் மேலூர் கிராமத்தில் நடைபெறுகிறது இந்த பொதுக் கூட்டத்தை சிறப்புடன் செய்திட ஆலோசனைக் கூட்டம் திருவுடையம்மன் கோவிலின் எதிரே நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்தார், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் நாலூர் முத்துக்குமார், நகர செயலாளர் வி.பட்டாபிராமன், செல்வகுமார், மேலூர் சிவலிங்கம், என்.ஆர்.கோபால், மீஞ்சூர் மாரி, திராவிட செல்வன், அமிர்தலிங்கம், தர்மபிரகாஷ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய 8 ஊராட்சியை சேர்ந்த ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் பலராமன் அனைத்து பகுதிகளிலும் இருந்நது திரளான கட்சி நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் அதற்கான வாகன வசதி, பாதுகாப்பு குறித்து நிர்வாகிகளின் மத்தியில் எடுத்துரைத்து பேசினார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் என நிர்வாகிகளின் மத்தியில் பேசினார்.
No comments