சீர்காழியில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதி செய்வோம் மண்ணின் மக்களின் நடைப்பயணம் என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக மாலை நேரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு பங்கேற்று பேசுகையில், காவல்துறை நடை பயணத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை அதை காட்டிலும் துண்டு அறிக்கை விநியோகிக்கவும் அனுமதி அளிக்கவில்லை என தோழர்கள் கூறினர். இந்த மண்ணையும், மக்களையும் காக்க வேண்டும் என ஒரு தூய்மையான நோக்கத்தோடு இந்த முயற்சி எடுத்து நடைப்பயணம் தொடங்கி இருக்கிறார்களள்.
ஆனால் காவல் துறையினர் டாஸ்மாக் கடைக்கு காவல் கொடுக்கிறார்கள், போதை பொருட்கள் யாராவது விற்பனை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு காவல் கொடுக்கிறார்கள் போதைப் பொருட்கள் யாராவது விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினரிடம் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கே தகவலை காவல்துறையினர் சொல்லிவிடுகின்றனர்.
இங்குள்ள காவல்துறை அதிகாரிகள் உங்களுக்கும் சேர்த்து தான் இந்த போராட்டம். ஓ.என்.ஜி.சி. சார்பில் இயற்கை வளத்தை அழிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன், இயற்கை எரிவாயு, மீத்தேன் போன்ற எத்தனா திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்கள். 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கொண்டு வருவதற்கான சட்டத்தை கொண்டு வந்தார்கள்.
அந்த சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த இயக்கம் திமுக. எதற்காக வெளிநடப்பு செய்தது என்றால் அந்த சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு முன்பு இருந்த எண்ணை கிணறுகளை மூட வேண்டும் என்பது போன்றவைகள் இந்த சட்டத்தில் இல்லை 700க்கும் மேற்பட்ட கிணறுகள் இருக்கின்றன. அவற்றை மூட வேண்டும் என்ற செய்தி அந்த சட்டத்தில் இல்லை. இந்த நிலையில் எங்கெல்லாம் காவேரி ஓடுகிறதோ காவிரி படுகைகள் உள்ளவைகளும் அந்த சட்டத்தில் குறிப்பிடவில்லை. கடலூர் மாவட்டம் இல்லை திருச்சியில் சில பகுதிகள் குறிப்பிடப்படவில்லை.
இந்த இரண்டை சுட்டிக்காட்டி ஏற்கனவே உள்ள கிணறுகளை மூடப் போகிறீர்களா? டெல்டா பகுதி உள்ள அனைத்து பகுதிகளையும் இணைக்க போகிறீர்களா என திமுக இந்த சட்டத்தை எதிர்த்ததற்கு முழுமையாக வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் காரணம், முழுமையாக இந்த மண்டலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தான். ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். இதே கோரிக்கையை தான் பேராசிரியர் ஜெயராமன் எழுப்புகிறார் அன்று திமுக சட்டசபையில் சொல்லியதை இன்று பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்துகிறார்.
இதில் என்ன தவறு உள்ளது. ஏன் காவல்துறை நடைபயத்தை தவிர்த்து துண்டறிக்கை கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் இடத்தில் வைக்கின்றேன். மக்களை, மண்ணை பாதுகாக்கின்ற பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறது, மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம் எழுப்பப்பட்டதோ அந்த உணர்வில் இருந்து கிளம்பியவர்கள் தான் நாங்கள். அப்படி இருக்கும்போது நடைப்பயணத்தை காவல்துறையினர் தடுத்தது என்ன மாதிரியான அணுகுமுறை. காவல்துறை இந்த போக்கை உடனடியாக கைவிட வேண்டும்.
நடை பயணத்தை தொடர காவல்துறை அனுமதிக்க வேண்டும். முதல்வருக்கும் இந்த கோரிக்கை வைக்கின்றேன். ஒன்றிய அரசு மாநில அரசு எந்த அரசு தவறு செய்தாலும் மக்களுக்கு எதிரான திட்டங்களை எந்த அரசு கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதில் விடுதலை சிறுத்தைகள் முன்னிலையில் இருப்போம். அதற்காக நாங்கள் விடுதலை சிறுத்தைகள் அமைதியாக இருப்போம் என எழுதிக் கொடுக்கவில்லை. மக்களுக்கான அரசாக மக்களை பாதுகாக்க கூடிய அரசாக இருக்க வேண்டும். மக்களை பாதுகாக்க கூடிய கொள்கைகளை கொண்ட அரசாக இருக்க வேண்டும்.
மேலும் ஓஎன்ஜிசி நிறுவனம் 200 கிணறுகளை பராமரிப்பு என்ற பெயரில் தோண்டி கொண்டுள்ளார்கள். வேளாண் மண்டலமாக இருக்கக்கூடிய இந்த பகுதி மிகவும் மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது .மக்களை பாதுகாக்க வேண்டும் என தூய்மையான, உன்னதமான ,மகத்தான கோரிக்கையை இந்த கூட்டமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களை ஆதரிப்பதற்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதேபோல எதிர்ப்பதற்கும் உரிமை இருக்கிறது.
இதே பாஜக துண்டு பிரசுரங்களை கொடுத்தால் நீங்கள் தடுத்து விடுவீர்களா தற்போதைய அரசு எதிர்க்கட்சியாக இருக்கும் போது என்னென்ன எதிர்த்தீர்களோ அதை நாங்களும் எதிர்த்தோம் தற்போது நீங்கள் ஆளுங்கட்சியாக வந்த பிறகு அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாற முடியாது. இந்த நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என ஒரு அக்கறையும் கோரிக்கையை வைக்கின்றோம்.
விடுதலை சிறுத்தைகள் மது ஒழிப்பு கோரிக்கை முன்வைக்கின்றோம் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டு அக்டோபர் 2-ம் தேதி நடத்துகிறோம். பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் இந்த கொள்கையில் நாங்கள் பிஎச்டி என்கிறார். 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியுடன் பாமக அக்ரிமெண்ட் போடும்போது 5 கோரிக்கையில் ஏன் மது ஒழிப்பு முன்னிலைப்படுத்தவில்லை. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு ஆகியவற்றை கேட்ட பாமக பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கையை வைக்கவில்லை.
நாடு இன்று மிக மோசமான நிலையில் உள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை உள்ளது. இது காவல்துறைக்குத் தெரியாதா என வன்னி அரசு கேள்வி எழுப்பினர்.
No comments