புதுச்சேரி நகராட்சி மூலம் சிறப்பு தூய்மைப்படுத்தும் முகாம் கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் நேரு துவங்கி வைத்தார்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் புதுச்சேரி நகராட்சி மூலம் சிறப்பு தூய்மைப்படுத்தும் முகாம் கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்றது. தூய்மைப்படுத்தும் முகாமினை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமான நேரு(எ)குப்புசாமி துவக்கி வைத்தார். இம்முகாமின் மூலம் கோவிந்தசாலை பகுதிகளான கண்டக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி, குபேர் நகர், புது நகர், வாஞ்சிநாதன் வீதி, சுப்பிரமணியசிவா வீதி,காமராஜர் வீதி, அந்தோணியார் கோவில் தெரு மற்றும் கோவிந்தசாலை ராஜீவ் காந்தி அரசு குடியிருப்பு பகுதி போன்ற பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் சிறப்பு தூய்மை பணியில் ஈடுபட்டு அப்பகுதிகளை சுத்தம் செய்தனர்... நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் உதவி பொறியாளர் நமச்சிவாயம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மேலும் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மனித நேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பொது மக்கள் பலர் உடன் இருந்தனர்.
No comments