சீர்காழியில் கடைகள் அடைத்து வர்த்தகர்கள் மறைந்த த. வெள்ளையனுக்கு மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம், நகர வர்த்தக சங்கம், வர்த்தக நல சங்கம் ஆகியன சார்பில் கடையைப்பு நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி அவரக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வர்த்தக பாதுகாப்பு சங்கம் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது. இதேபோல் நகர வர்த்தக சங்கம் சார்பில் காலை 11மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. பழையபேருந்துநிலையம், புதியபேருந்துநிலையம், கடைவீதி, மணிகூண்டுபகுதி, கச்சேரிசாலை, தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் இச்சங்களுக்கு உட்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் பேரமைப்பு இணைந்து புதிய பேருந்து நிலையம் எதிரே வெள்ளையன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சீர்காழி வர்த்தக பாதுகாப்பு சங்கம் தலைவர் கார்த்திகேயன் தலைமையில், செயலாளர் சுந்தர சோழன் பொருளாளர் ராஜா, துணைத் தலைவர் சத்யநாராயணன், ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராஜ், ஆலோசகர் பிரபாகரன், துணை செயலாளர் ஆனந்த் முன்னிலையில் மௌனஅஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகியும்,நகர வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் துரைராஜ் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் கோ. மாக்ஸ் பிரியன், நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ஆகியோர் பங்கேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
No comments