உலக நன்மை வேண்டி கஞ்சி கலயம் தீ சட்டி முளைப்பாரி ஏந்தி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் பெண்கள் ஊர்வலம்.
காரைக்காலில் இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை காக்க வேண்டி தீச்சட்டி ஏந்தியும், விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி தூக்கியும், உணவுப் பஞ்சம் ஏற்படாமலிருக்க கஞ்சிக் கலையம் சுமந்தும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் உள்ள பெண்கள் ஆண்டுக் கொருமுறை வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்தாண்டு இவ்வழிபாட்டு நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கஞ்சிக் கலையம் சுமந்து வழிபட்டனர். செவ்வாடை உடுத்தி வந்த பெண்கள் தங்கள் தலையில் கஞ்சிக் கலையம் , தீச்சட்டி மற்றும் முளைப்பாரிகளை சுமந்து ஊர்வலமாக சென்றனர். காரைக்காலம்மையார் ஆலயத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக வந்து வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. அங்கு பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினார்கள். நிகழ்ச்சியில் புதுச்சேரி மின் திறல் குழும இயக்குனர் மீனாட்சி சுந்தரம், ஆதிபராசக்தி மன்ற ஆலோசகர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments