திண்டிவனத்தில் கோவிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கியதில் குடும்பத்துடன் உயிர் தப்பிய கார்கோ அதிகாரி.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகன் பாலசுப்பிரமணியன் (47). கார்கோ அலுவலர் இவர் தன்னுடைய மனைவி சீதாலட்சுமி (41),உறவினர் மைதிலி ஆகியோருடன் சென்னையில் இருந்து தனது பூர்வீகமான ஊருக்குச் சென்று கும்பகோணம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார்.
இந்த கார் திண்டிவனம் சென்னை புறவழிசாலையில் ஜக்காம்பேட்டை, கர்ணாவூர் பேட்டைமெயின் ரோடுக்கு இடையில் முன்பக்க டயர் வெடித்து காரை இழுத்துச் சென்று சென்டெர்மிடியனில் ஏறி எதிர் திசையில் ரோட்டில் நின்றது. அந்த நேரத்தில் எதிர் திசையில் வாகனம் ஏதும் வராததால் பெரும் விபத்தின்றி காரில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் காரில் திடீரென புகை வர ஆரம்பித்ததால் காரில் இருந்தவர்கள் காரில் இருந்து வேகமாக இறங்கி தப்பித்தனர்.
பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினர் வந்து காரில் வந்த புகையை தண்ணீர் பீய்ச்சியடித்து தீபிடிக்காமல் பெரும் விபத்தை தவிர்த்தனர். தகவல் அறிந்தவுடன் நெடுஞ்சாலைத்துறை போலீசார் போக்குவரத்த்தை சீர் செய்தனர். சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments