தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பிரமாண்ட வரவேற்பு.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்று ஊர் திரும்பிய ஆசிரியருக்கு ஊர் பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு. கோவிலில் மாலை அணிவித்து பேண்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்து பாராட்டு.
சென்னை வண்டலூர் கிரெசன்ட்; கல்லூரியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பல்வேறு ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை நேற்று வழங்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்; பொய்யாமொழி ஆகியோர் ஆசிரியர்களுக்கு இவ்விருதுகளை வழங்கினர்.
இவ்விழாவில், மயிலாடுதுறை காளி ஊராட்சி கன்னியாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கன்னியாநத்தம் ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிஷன் காமாட்சி உதவிபெறும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.வரதராஜன் நல்லாசிரியர் விருது பெற்றார். விருதுபெற்று இன்று பள்ளிக்கு திரும்பிய ஆசிரியருக்கு பள்ளிச் செயலர் சுந்தர், ஆதீனக் கல்வி நிறுவனங்களின் செயலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
விருதுபெற்ற ஆசிரியரை கௌரவிக்கும் விதமாக கிராமமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் அவரை கயிலாசநாதர் கோயிலில் இருந்து ஆசிரியருக்கு மாலை தலைகிரீடம் அணிவித்து பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்று பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடத்தினர். அமைச்சர்களிடம் நல்லாசிரியர் விருது பெற்ற நிகழ்ச்சி எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது.
No comments