Breaking News

வேல்ராம்பேட் பிரதான சாலையை இணைப்பதற்கு ரூ.99 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.


புதுச்சேரி மாநிலம், முதலியார்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள உழந்தை ஏரியின் கிழக்கு கரையின் மேல் அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை வேல்ராம்பேட் பிரதான சாலையை இணைப்பதற்கு ரூ.99 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.  

முதலமைச்சர் ரங்கசாமி  தலைமையில் நடைபெற்ற பூஜையில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், நீர்ப்பாசன கோட்டம் செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!