செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 800 குவிண்டால் பருத்தி ரூ.65 லட்சத்திற்கு கொள்முதல்.
அந்த வகையில் நேற்று முன்தினம் நாகை விற்பனைகுழு செயலாளர் கோ. வித்யா தலைமையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.8,699-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,869-க்கும் சராசரியாக ரூ.7,830-க்கும் விலைபோனது. மொத்தமாக சுமார் 800 குவிண்டால் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆயிரத்து 250 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12 வியாபாரிகள், மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.
மேலும் விற்பனைகுழு செயலாளர் கூறுகையில் விவசாயிகளின் விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்க தமிழக அரசு பல திட்டங்களையும், பல சலுகைகளும் செய்துவரும் நிலையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், எள், கம்பு, மக்காசோளம், பச்சபயறு, உளுந்து, தேங்காய், மிளகாய், போன்ற விளைபொருட்களை விற்பனை கூடங்களின் மூலம் விற்று இடை தரகர் இல்லாமல் நல்ல விலை பெற்று பயன் அடைய வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
No comments