Breaking News

தளிஹள்ளி கிராமத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்71 அடி உயர திமுக கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த  தளிஹள்ளி கிரமத்தில் முதலமைச்சரின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு 71 அடி உயர திமுக கொடியைற்றி கிராம பெண்களுக்கு உதவிகளை வழங்கினார் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன். முன்னதாக தளிஹள்ளி கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தெண்பென்ணை ஆற்று பாலத்தில் முகப்பிலிருந்து நடை பயணமாக கிராமத்திற்கு வந்த மதியழகனுக்கு, ஒன்றிய செயலாளர் மகேந்திரன்  தலைமையில் சிறப்பான வறவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 71 அடி உயர திமு கழகத்தின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

பின்னர் அங்கேயை அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய மதியழகன், முதலமைச்சர் கூறுவது போல், எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான், வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் எப்போதும் நான் உழைத்துக்கொண்டே இருப்பேன் என பேசினார். பின்னர் கிராம பெண்கள் அனைவருக்கும் இலவசமாக ஹாட்பாக்ஸ் வழங்கினார். 

அதேபோல் மாரிகவுண்டனூர், சவுளுர், சின்னதளி ஹள்ளி, கண்ணன்கொட்டாய், மாரிசெட்டிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம் மற்றும் நெடுங்கல் ஆகிய கிராமங்களிலும் திமுக கொடியேற்றினார்.

No comments

Copying is disabled on this page!