சீர்காழி அடுத்த உலகப் புகழ்பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் 70க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் 395க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது .இந்நிலையில் இன்று ஒவ்வொரு விநாயகர் சிலையாக நீர் நிலைகளில் கரைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த உலகப் புகழ்பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் திருவெண்காடு பூம்புகார் செம்பனார்கோவில் காவல் சரக்கத்துக்கும் உட்பட்ட 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து காவிரி சங்கமத் தீர்த்தத்தில் சிறப்பு பூஜைக்கு பின் சங்கமம் தீர்த்தத்தில் கரைத்தனர்.
திருவெண்காடு, மங்கைமடம், சித்தன் காத்திருப்பு, பூம்புகார், வானகிரி, தர்மக்குளம், கருவி, செம்பனார்கோவில், ஆக்கூர், திருநாங்கூர், திருவாளி, திருநகரி, மேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்த 70க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி பூம்புகார் சங்கமம் தீர்த்தத்தில் கரைத்தனர்.
No comments