மயிலாடுதுறையில் ஷீஹான் ஹூசைனிஸ் இஷின்றி-யூ கராத்தே பயிற்சி பள்ளி மாணவ-மாணவிகள் 1111 முறை உச்சிசுக்கி தாக்கும் முறையை தொடர்ந்து, 7 மாணவிகள் 160 ஓடுகளை உடைத்து சாதனை.
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் கே.எஸ்.ஓ. அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில் ஸ்ரீராமச்சந்திரா அகாடமி சார்பில் ஷீஹான் ஹூசைனிஸ் இஷின்றியு கராத்தே பயிற்சி பள்ளி மாணவ-மாணவிகளின் மாநில அளவில் சாதனை படைத்தனர். கராத்தே பயிற்றுநர் சசிகுமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தொடக்கி வைத்தார்.
இதில் 80 மாணவ-மாணவிகள் பங்கேற்று 1111 முறை உச்சிசுக்கி தாக்கும் முறையை தொடர்ந்து 20 நிமிடங்களில் 160 ரயில்வே ஓடுகளை 7 மாணவிகள் கைகளால் உடைத்து சாதனை படைத்தனர். ஒவ்வொரு 50 முறை உச்சிசுக்கி தாக்கும் முறையின்போதும் மாணவிகள் ரயில்வே ஓடுகளை உடைத்தபோது பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். இந்த போட்டியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.
No comments