தூத்துக்குடியில் 5வது புத்தகத்திருவிழா, நெய்தல் கலைவிழா; முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு.
தூத்துக்குடியில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவிருக்கும் புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி 5ஆவது புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை எட்டையபுரம் சாலையில் உள்ள சங்கரப்பேரி திடலில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், தாசில்தார் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் சரவணவேல்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments