மேட்டூர் அணை திறந்து 50 நாட்களை கடந்தும் சீர்காழி சுற்றுவட்டார பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் வராததால் விசாயிகள் வேதனை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் பகுதிகளில் ஆண்டுதோறும் 50000 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்படுவது வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதியான சீர்காழி பகுதிக்கு முழுமையாக வந்தடையாத நிலையில் மழையை நம்பி நேரடி சாகுபடியும் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் நடவு சாகுபடியும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறந்து 50 நாட்களைக் கடந்தும் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை உரிய நேரத்தில் சம்பா சாகுபடியை தொடங்க வேண்டும் என்பதால் மோட்டார் வசதி கொண்ட விவசாயிகள் சம்பா சாகுபடி துவங்கிய நிலையில் பாசன வசதி இல்லாத விவசாயிகள் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பை துவங்கியுள்ளனர். காவிரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் இன்னும் பெரும்பாலான வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை.
காலம் கடந்து நடவு பணி செய்வதால் பருவ மழையில் சம்பா பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான நல்லாஞ்சாவடி,புங்கனூர் செங்கமேடு,மல்லுக்குடி, மருவத்தூர், செங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குறைந்த வயதுடைய நெல் விதைகளை தேர்வு செய்து நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடி விதைப்பின் மூலம் செலவு குறைவதுடன் ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து உரிய நேரத்தில் சம்பா சாகுபடையை செய்ய முடியும் என தெரிவிக்கும் விவசாயிகள் சம்பா சாகுபடியை தடையின்றி தொடர காவிரியில் முறைவைக்காமல் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments