Breaking News

மீஞ்சூரில் குட்கா பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த மூவர் கைது. 50 கிலோ குட்கா பொருட்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கடைகளில் ஆய்வு செய்த போது இரண்டு கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து கடையில் பதுக்கி குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த சீனிவாசன், அஜித்குமார், அப்துல் காதர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ குட்கா பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!