காரைக்காலில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைப்பு.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 7-ஆம் தேதி அன்று காரைக்கால் நகர பகுதியில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விநாயகர் சிலைக்கு பல்வேறு விதமான வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று அனைத்து விநாயகர் சிலைகளும் காரைக்கால் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு இந்து முன்னணியின் காரைக்கால் மாவட்ட தலைவர் கணேஷ் குமார் தலைமையிலும் இந்து முன்னணியின் நகர தலைவர் ராஜ்குமார் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளர் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி என் எஸ் ராஜசேகரன் மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வளத்தினை துவக்கி வைத்தனர் அங்கிருந்து காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு இசைக் கருவிகள் இசைக்க, ஆட்டம், பாட்டம் என நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் நிருபர்களிடம் பேசுகையில் இந்நிகழ்ச்சிக்காக அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்திற்கும் உரிய முறையில் பாதுகாப்பை வழங்கிய மற்றும் போக்குவரத்தை சரி செய்த காவல்துறைக்கும் இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்து முன்னணி அமைப்பினருக்கும் இதனை கண்டு களித்த அனைத்து தரப்பு மக்களுக்கும் மேலும் மீனவ கிராம பஞ்சாயத்தார் களுக்கும் நன்றியினை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதன் பின்னர் சிலைகள் அனைத்தும் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்குள்ள கடற்கரையில் பூஜை செய்த பிறகு விநாயகர் சிலைகளை படகுகளில் ஏற்றி நடுக்கடலுக்கு கொண்டு சென்ற மீனவர்கள் சிலைகளை கடலில் கரைத்தனர்.
இதேபோல காரைக்காலை அடுத்துள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, திருப்பட்டினம், கோட்டுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
No comments