விசா நீட்டிப்புக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம் தீா்பளித்தது.
காரைக்காலைச் சோ்ந்தவா் தாந்தோம் பாஸ்கரன். இவரது தாய் முத்துலட்சுமி. இவா் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவா். கடந்த 2014-ஆம் ஆண்டு முத்துலட்சுமி புதுவைக்கு வந்தாராம். அவரது விசா நீட்டிப்புக்காக தாந்தோம் பாஸ்கரன், புதுச்சேரியில் உள்ள மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அப்போது, அங்கு உதவியாளராக இருந்த மணிவண்ணன் ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில், சிபிஐ போலீஸாா் மணிவண்ணனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மணிவண்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்டத் தலைமை நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டாா்.
No comments