இளையான்குடி பகுதியில் விஷவாயு தாக்கப்பட்டு இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா ரூ.5 இலட்சம் வீதம் நிவாரணத் தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், அவர்கள் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட சீத்தூரணி கிராம சாலை பிஸ்மில்லா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், கழிவறைக்கான ஆழ்குழி உறைகிணறு அமைக்க சுமார் 25 அடி அளவில் பள்ளம் தோண்டும் பணியினை கடந்த 21.09.2024 அன்று மேற்கொண்ட சீத்தூரணி கிராமத்தை சேர்ந்த ராமையா (வயது.62) மற்றும் திருவுடையார்புரம் வருவாய் கிராமம், அம்முக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது.52) ஆகியோர் விஷவாயு தாக்கப்பட்டு இறந்தமைக்காக, இரண்டு தொழிலாளர்களின் வாரிசுதாரர்களான குடும்பத்தினருக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் வழங்கப்படும் பணியிட விபத்து மரண நிவாரணத் தொகையாக தலா ரூ.5,00,000/- வீதம் மொத்தம் ரூ.10,00,000/-ற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், அவர்கள், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.
No comments