புதுச்சேரி அருகே மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 5 கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாயகிருஷ்ணன் தனது ஊரின் அருகே உள்ள பொக்லைன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் பின்புறம் மாடுகளை மேய்த்து உள்ளார். அப்பொழுது சில மாடுகள் தொழிற்சாலையின் பின்புறமாக தேங்கி நிற்கும் கழிவு நீரை குடித்ததாக கூறுகின்றனர். மாலை மீண்டும் மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர் பின்பு நேற்று இரவு திடீரென இரண்டு மாடுகள் வாயில் நுரையுடன் மயங்கி விழுந்து உயிரிழந்தன. தொடர்ந்து இன்று காலை அதே போன்று மற்றொரு மாடும் உயிரிழந்துள்ளது.
இதேபோன்று கடந்த 4 மாதத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் 4 மாடுகளும் உயிரிழந்துள்ளன. தொடர்ந்து இப்பகுதியில் அடிக்கடி மாடுகள் உயிரிழந்து வருவது இப்பகுதியில் கால்நடை வளர்ப்பு மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இறந்து உள்ள மாடுகள் ஒவ்வொன்றும் சுமார் 60 ஆயிரம் மதிப்புமிக்க மாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments