காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு. 484 பேர் பங்கேற்பு.
தமிழக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக தட்டச்சு தேர்வு காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 484 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்றனர். இதில் பிரி ஜூனியர், ஜூனியர், சீனியர், ஹை ஸ்பீட் ஆகிய பிரிவுகளில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழ் ஆங்கிலம் இரண்டாம் பேப்பர் ஜூனியருக்கு 45 நிமிடங்களும் சீனியருக்கு ஒரு மணி நேரமும் தேர்வு நடந்தது.முதல் பேப்பர் மற்றும் (ஹை ஸ்பீட்) உயர் வேகத்திற்கு பத்து நிமிடங்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது. தலைமை கண்காணிப்பு அதிகாரி ஆர்.பாபுஅசோக் மற்றும் கூடுதல் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஆர்.அகிலா ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments