சீர்காழியில் 41 விநாயகர் சிலைகள் உப்பனாற்றில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பலத்த போலீஸ் பாதுகாப்பு கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆபத்து காத்த விநாயகர், கணநாதர், சித்தி விநாயகர், மாணிக்க விநாயகர், செல்வவிநாயகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 41 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு,வழிபாடு நடைபெற்றது.
இதனிடையே மூன்றாம் நாளான இன்று அனைத்து விநாயகர் சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக ஒவ்வொரு கோயிலிலும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வண்ண விளக்குகளால், அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக பழைய பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து ஒவ்வொரு விநாயகராக கச்சேரி சாலை, புதிய பேருந்து நிலையம், தென்பாதி வழியாக சென்று உப்பனாற்றில் கரைக்கப்பட்டது. விசர்ஜனத்தை முன்னிட்டு மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் மேற்பார்வையில், சீர்காழி டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments