Breaking News

திண்டிவனம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே மோதல் கத்தியால் ஒருவரை ஒருவர் கீறிக்கொண்டதால் பரபரப்பு 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வரும் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த மாணவனுக்கும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் வேறொரு கிடங்கல் பகுதியை சேர்ந்த  மாணவனுக்கும் தங்கள் பகுதி குறித்து ஒருவரை ஒருவர் ஏற்கனவே வாக்கு வாதம் உள்ளது. 

கடந்த நான்காம் தேதி கல்லூரி வளாகத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கைகளுக்கு ஈடுபட்டுள்ளனர் கல்லூரி நிர்வாகம் கண்டித்ததை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலந்து சென்றனர். இந்நிலையில் கடந்த 6.ஆம் தேதி கருணாவூர் பாட்டையில் உள்ள தனது நண்பன் வீட்டிற்கு தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த மாணவன் சென்றுள்ளான் அங்கு கிடங்கல் பகுதியை சேர்ந்த மாணவனும் சென்றதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.


சண்டையை தொடர்ந்து தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு படித்து வரும்  மாணவன் தனக்கு ஆதரவாக திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்தவரும் இரண்டு மாணவர்களையும், மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவன் ரங்க பூபதி கல்லூரியில் இரண்டு பேரையும் அழைத்துள்ளனர் அப்பொழுது இவர்கள் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து தென்பசார் ஜே ஆர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும் இரு தரப்பினரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


இது குறித்து மோதலைத் தொடர்ந்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பினரையும் விசாரணை செய்து நான்கு பேரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.இதன் மூலம் போலீசார் கல்லூரியில் ஏற்படும் பிரச்சனைகளை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து சரி செய்து கொள்ள வேண்டும். என்றும் வெளிப்பகுதிகளில் மோதலாக வெடித்தால் இது போன்ற கைது நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்தனர்.

No comments

Copying is disabled on this page!