நெல்லை மாவட்டத்தில் புதிதாக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 13 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு பட்டியல் இறுதி செய்து தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, சிபிஐ தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் தேர்தல் பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாகவும் கட்டிட மாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் தொடர்பாகவும் ஆலோசனையை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பொதுமக்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பல்வேறு நடவடிக்கைகள் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ள ரெட்டியார்பட்டி மற்றும் அம்பாசமுத்திரம் வாகைகுளம் பகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக விரிவாக்கப் பகுதிகளில் நூறு வீடுகளுக்கு மேல் இருந்தால் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின் படி 4 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாக்குசாவடிகள. மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
13 வாக்குச்சாவடிகள் அமைவிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏழு வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் உள்ளாட்சி தேர்தலுக்காக தனியாக வாக்குச்சாவடி பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் தற்போதுள்ள வாக்குச்சாவடிகளின் அடிப்படையில் கணினி மூலம் தேர்தலின் போது வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments