ஈரோட்டில் கஞ்சா மற்றும் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு இளைஞர்கள் போலீசாரல் கைது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் கஞ்சா மற்றும் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியதில், மஞ்சக்காட்டுவலசை சேர்ந்த சிவக்குமார், கல்லூரி மாணவர்கள் பிரித்விராஜ், கமலகண்ணன் மற்றும் வேலம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராகுல் ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
No comments