மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. 10 அடிக்குள் விநாயகர் சிலைகள் இருக்க வேண்டும் என சீர்காழியில் விநாயகர் சிலை ஊர்வலம் இடத்தினை ஆய்வு செய்த பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்.
சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைபெறும் இடமான பழையபேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் 7 மற்றும் 8}ம் தேதி விநாயகர் ஊர்வலத்திற்கு தேவையான பாதுகாப்பு குறித்து டி.எஸ்.பி. ராஜ்குமாரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் எஸ்.பி. கூறுகையில், மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 395 வினாயர்கள் சிலைகள் வைத்து வழிபாடு செய்து விசர்ஜனம் செய்வதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் 10அடிக்குள் இருக்கவேண்டும் என விழா குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் பகுதியில் விழாகுழுவினர் சிசிடிவி காமிரா பொருத்தி கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் வினாயகர் சிலை ஊர்வலத்திற்கு தேவையான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தபடுவார்கள். புதிய வினாயகர் சிலைகள் நிறுவுவதற்கு அனுமதி கிடையாது என்றார். அதன்பின்னர் வினாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் உப்பனாற்று பகுதியில் எஸ்.பி. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் புயல். பாலசந்திரன் உடனிருந்தனர் .
முன்னதாக சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் காவல் ஆய்வாளர் புயல்.பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை விசர்ஜனம் செய்யும்போது விழாக் குழுவினர் செய்ய வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
No comments