சின்னமனூர் நகரில் இந்துமுன்னணி சார்பில் 39 ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விஜர்சன நிகழ்ச்சி.
தேனி மாவட்டம் செப்பேடு புகழ் பெற்ற சின்னமனூர் நகரில் இந்துமுன்னணி சார்பில் 39 ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விஜர்சன நிகழ்ச்சி மாவட்ட தலைவர் V.சுந்தர் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு அந்த அமைப்பின் ஒன்றிய அமைப்பு செயலாளர் ரெங்கசாமிவரவேற்புரையாற்றினர்.
மதுரை கோட்ட செயலாளர் கோம்பை. கணேசன், மாநில அமைப்பாளர் ச.ராஜேஷ் சிறப்புறையாற்றி கொடி அசைத்து துவக்கி வைத்தார். கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் P.C.பாண்டியன், ஊராட்சி குழு மாவட்ட துணைதலைவர் ராஜபாண்டியன், HYF மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா மற்றும் இந்துமுன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள், சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன் நன்றியுறையாற்றினர். பின்னர் ஸ்ரீவிநாயகர் திருமேனிகள் அனைத்து முல்லையாற்றில் விஜர்சனம் செய்யப்ட்டது.
No comments