உளுந்தூர்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த 38 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உ.கீரனூர் பெரிய ஏரியில் கரைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெரு, பேருந்து நிலையம், மிளகு மாரியம்மன் கோவில் தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு ,உளுந்தாண்டவர் கோவில், உ.கீரனூர் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் 7 அடி முதல் சுமார் 10 அடி உயரம் அளவிலான 38 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சனிக்கிழமை மாலை விநாயகப் பெருமானுக்கு சுண்டல் கொழுக்கட்டை பழங்கள் பொரிகடலை உள்ளிட்ட பொருட்களை வைத்து படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாள் திங்கட்கிழமை மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் பகுதியில் 38 விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு ஊர்வலம் தொடங்கியது நகரின் முக்கிய வீதிகள் வழியாகவும், தேரோடும் வீதிகளில் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது அப்போது வீடுகளில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்டது.
மேளதாளம் மற்றும் அதிர்வேட்டு முழங்க ஆரவாரத்துடன் வண்ணப் பொடிகள் துவப்பட்டு உற்சாகமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சேலம் சாலையில் உள்ள ஊ.கீரனூர் பெரிய ஏரியை அடைந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி போலீஸ் டிஎஸ்பிகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் பிரதீப் குமார் ஆகியோர் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments