புரட்டாசி முதல் நாளை முன்னிட்டு புதுச்சேரி வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா சார்பில் 32-ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக செல்வதை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.
புரட்டாசி மாதம் முழுக்க முழுக்க தெய்வ வழிபாட்டுக்குரிய மாதம்.அதனால் தான் இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதன்படி புரட்டாசி மாத முதல் நாளில் வழிபாட்டினை துவக்குவதால் புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளின் அருளால் நமக்கு நன்மைகள் பலவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு புஜைகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா சார்பில் 32 ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு செல்லும் பாதயாத்திரையானது அடுத்த மாதம் 6-தேதி புறப்படுகிறது. இதற்காக பாதயாத்திரை செல்பவர்கள் இன்று மாலை அணிவித்துக் கொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர். இதில் வெங்கடச பெருமாள் பக்த ஜன சபா நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments