தேவர் சமூக நல சங்கம் சார்பாக மாமன்னர் பூலித்தேவன் 309வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேவர் சமூக நல சங்கம் சார்பாக கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலை முன்பு இந்திய விடுதலை போராட்ட முதல் மாவீரர் பாண்டிய மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 309 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு மாமன்னர் பூலித்தேவர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவில் கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி பொறியாளர் அணி செயலாளர் ரமேஷ் வழக்கறிஞர் பழனி குமார் தமக ராஜகோபால் பாஜக தொழில் பிரிவு மாவட்டத் தலைவர் மாரியப்பன் மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் சரவணன் கோடையிடி ராமச்சந்திரன் பார்வார்ட் ப்ளாக் அழகுபாண்டியன் தேவர் சமூக நல சங்க தலைவர் அசோக் குமார் துணைத் தலைவர் ராமச்சந்திரன் பூல்பாண்டியன் செயலாளர் வேல்முருகன் பொருளாளர் கார்மேக பாண்டியன் துணைச் செயலாளர் மாரிமுத்து. செல்லபாண்டி சுவாதி ராஜா. ராமர் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விழாவை சிறப்பித்தனர்
No comments