பொன்னேரி அருகே பழமை வாய்ந்த 3கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சி சிங்கிலிமேடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிராம தேவதை அருள்மிகு பனையாத்தம்மன் ஆலயம், அருள்மிகு சீனிவாசப்பெருமாள் ஆலயம், அருள்மிகு தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரர் ஆலயங்கள் அமைந்துள்ளன. பழமை வாய்ந்த இந்த ஆலயங்கள் பக்தர்கள் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஆச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து ஆலயங்களை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து 3 ஆலயங்களின் ராஜகோபுரங்களின் கலசங்களில் புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments