பேரணாம்பட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 2.09.2024 இன்று பத்தலப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் பொன். வள்ளுவன் இன்று தங்கள் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நா. அபினேஷ் ர. ராமு ச. ஜெனாமுனி ஆகியோருக்கு தன்னுடைய சொந்த செலவில் மாணவச் செல்வம் செல்வங்களுக்கு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தார்.
இவர் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு பள்ளியில் சுத்தம் சுகாதாரம் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளின் சிறப்பு நிகழ்வுகளை குறும்படமாக வெளியிட்டதில் இவருக்கு மதுரை மண்டலத்தில் நடைபெற்ற மருத்துவதற்கான மருத்துவரத்தினம் விருது வழங்கும் விழாவில் அழைத்து தலைமையாசிரியர் பொன். வள்ளுவனை கௌரவித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments