Breaking News

வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரினை விசாரிக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் அதிரடி மாற்றம்.


வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பாக்கம் பாளையம் கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவர் பிரேம்குமார் என்ற வாலிபர் மீது வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர்  சுரேஷ் பாபுவிடம் புகார் ஒன்றினை அளித்தார், அந்தப் புகார் மனுவில் பிரேம்குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் தனிமையில் இருந்ததாகவும் தற்போது என்னிடம் பேசாமல் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருப்பதாகவும் அந்த பாதிக்கப்பட்ட பெண் பிரேம்குமாரிடம் சென்று நியாயம் கேட்டதற்கு தன்னுடன் தனிமையில் இருந்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் தன் தந்தை மற்றும் உறவினர்களுடன் சென்று வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபுவிடம் புகார் அளித்துள்ளார் புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் உரியவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மெத்தனப்போக்கு காட்டி வந்ததாகவும்  கூறப்படுகிறது.


இதனால் அந்தப் பெண் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (DVC) சமூக நலத்துறையில் புகார் அளித்ததால் இதேபோன்று  வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தொடர்ந்து புகார்களை விசாரிக்காமல் மெத்தனப்போக்கு காட்டுவதால்  வேப்பங்குப்பம் கிராம மக்கள் இவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ் பி. மதிவாணனிடம் புகார் அளித்ததால் கடும் விரக்தி அடைந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பி . மதிவாணன் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு  உதவி காவல் ஆய்வாளர் குமார் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோபிநாத் ஆகிய மூன்று பேரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.



- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!