வாணியம்பாடி அருகே வீட்டின் முன் உள்ள முள்செடி அகற்றுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் 2 பெண்களுக்கு மண்டை உடைப்பு,
வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் வசித்தும் வரும் ஸ்ரீகாந்த் மற்றும் சீனிவாசன் ஆகியோர் குடும்பத்தினர் வீட்டின் முன் உள்ள முள்செடியை அகற்றுவது தொடர்பாக இருகுடும்பத்தை சேர்ந்த நபர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர், கட்டைகள், கம்பிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிகொண்டு, வீட்டின் அருகில் இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர், இந்த அடிதடி தகராறில் 2 பெண்களுக்கு மண்டை உடைந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த அனைவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருதரப்பினரின் புகார்களை பெற்று இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் வீட்டின் முன் இருந்த முள்செடி அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 2 பெண்களுக்கு மண்டை உடைந்து, 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பு. லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்
No comments